மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு...
மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 7 பேர் பலியாகினர். குளிர் பிரதேசமான டார்ஜிலிங் மாவட்டத்தில் நிலச்சரிவுகள் தொடர்ச்சியாக ஏற்பட்டதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் டார்ஜிலிங் மாவட்டப் பகுதிகளில் பரவலாக சனிக்கிழமை இரவு கனமழை பெய்துள்ளது.
இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்தும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்கு வங்காளம், சிக்கிம் இடையிலான முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
துர்கா பூஜை முடிவடைந்துள்ள நிலையில், தசரா விடுமுறைக்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் டார்ஜிலிங் வருகை தந்திருக்கும் நிலையில், கனமழை, நிலச்சரிவுகளால் அவர்கள் திட்டமிட்டபடி தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
