வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் டிசம்பர் 10 வரை நீட்டிப்பு!
2025–26 ஆம் ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மேலும் நீட்டித்துள்ளது.
முதலில் செப்டம்பர் 30 ஆக இருந்த கடைசி தேதி, பின்னர் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டது. வடமாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பாதிப்புகளால், வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறையில் தாமதம் ஏற்பட்டதாக சில மாநிலங்கள் மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தன. இதையடுத்து, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மாநில உயர்நீதிமன்றங்களும் கூடுதல் அவகாசம் வழங்குமாறு உத்தரவிட்டிருந்தன.

இந்த நிலையை பரிசீலித்த மத்திய நேரடி வரிகள் வாரியம், புதிய உத்தரவின் மூலம் தாக்கல் செய்ய வேண்டிய வருமான வரி தணிக்கை அறிக்கைகளுக்கான காலக்கெடுவை நவம்பர் 10ம் தேதி வரை, மேலும் **வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை டிசம்பர் 10** வரை நீட்டித்துள்ளது.
இதற்கான அறிவிப்பு நேற்று மத்திய வரித்துறை ‘X’ (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் கணக்காய்வாளர்கள், தொழில் நிறுவனங்கள், வணிகர்கள் உள்ளிட்ட வரிப்பதிவாளர்கள் பெரிதும் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்த நீட்டிப்பு நாடு முழுவதும் பொருந்தும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக வரித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
