ஜாமீனில் வெளி வந்ததும் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து.. தடுக்க வந்த மனைவிக்கும் நேர்ந்த சோகம்!

 
ஆஷித் கான்

சேலம் மாவட்டம் சின்னதிருப்பதி குருக்கல் தெரு பகுதியில் வழக்கறிஞர் ஆஷித் கான் மற்றும் அவரது மனைவி பத்மபிரியா வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். ஒருவர் வீட்டை விட்டு ஓடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், வழக்கறிஞர் ஆஷித்கான் மற்றும் அவரது மனைவி பத்மப்ரியா ரத்த காயங்களுடன் இருப்பதை பார்த்து, உடனடியாக அவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விளாத்திகுளத்தில் மனைவி கொலை

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ஜோசப் என்ற பாலாஜி என்பவர் வழக்கறிஞர் ஆஷித்கான் மற்றும் அவரது மனைவியை தாக்கியது தெரியவந்தது. மூன்று கொலைகள் மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய இந்த நபருக்கு ஜாமீன் வழங்கியவர் வழக்கறிஞர் ஆஷித் கான் என்பது தெரிய வந்தது.

நேரில் சந்தித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு ஆஷித்கானை ஜோசப் கத்தியால் குத்தியதும், தடுக்க வந்த மனைவி பத்மபிரியாவும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதும் தெரியவந்தது. தலைமறைவான ரவுடி பாலாஜியை கன்னங்குறிச்சி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web