6000 ஊழியர்கள் பணிநீக்கம், இது 1% மட்டுமே ... டிசிஎஸ் விளக்கம்!

 
டிசிஎஸ்
 

 
இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) – சமீபத்தில் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கைகள் குறித்து  விளக்கம் அளித்துள்ளது. அதன்படி  “இன்றுவரை 6,000 ஊழியர்களையே பணி நீக்கம் செய்துள்ளோம். இது மொத்த ஊழியர்களின் சுமார் 1% மட்டுமே” என  நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சுதீப் குன்னுமல் கூறினார்.

டிசிஎஸ் டாடா கல்சட்டன்சி

முந்தைய தகவல்களில், டிசிஎஸ் 12,000 பேரை வெளியேற்ற திட்டமிட்டதாகவும், பின்னர் 50,000–80,000 ஊழியர்கள் நீக்கப்படுவர் எனவும் செய்திகள் வெளியானது. இதனால் ஊழியர்களிடையே அச்சம் ஏற்பட்டது  தற்போது வரை நீக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மூத்த மற்றும் நடுத்தர நிலை ஊழியர்களாக இருந்துள்ளனர். அதே நேரத்தில், நிறுவனம் 18,500 புதிய நியமனங்களையும் செய்துள்ளது.

டிசிஎஸ் டாடா

இந்நிலையில், ஐ.டி ஊழியர்கள் கூட்டமைப்பின் அறிக்கையின்படி, டிசிஎஸ் நிறுவனம் மூன்றே மாதங்களில் 19,755 பேரை நீக்கியுள்ளதாக தனது பணியாளர் எண்ணிக்கையில் காணப்படுகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?