மத அடையாளங்களுக்குத் தடையில்லை... லென்ஸ்கார்ட் நிறுவனம் குறித்த சர்ச்சைக்கு நிறுவனர் விளக்கம்!

 
ஹிஜாப் ஹிஜாப்

 

லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் ஊழியர் சீருடைக் கொள்கை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் ஒன்று வேகமாகப் பரவி வந்தது. ஊழியர்கள் பொட்டு அல்லது திலகம் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான அந்த ஆவணத்தால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் நிறுவனர் பியூஷ் பன்சால் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

இணையத்தில் பகிரப்படும் அந்த ஆவணம் தவறானது என்றும் அது நிறுவனத்தின் தற்போதைய வழிகாட்டுதல்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார். திலகம் மற்றும் பொட்டு உள்ளிட்ட எந்தவொரு மத அடையாளங்களையும் வெளிப்படுத்துவதற்குத் தங்கள் நிறுவனத்தில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார். காலாவதியான சில பழைய தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியதற்குக் தங்களது வருத்தத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் நிறுவனம் இந்தியர்களால் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டது என்றும் ஊழியர்களின் கலாச்சார நம்பிக்கைகளைத் தாங்கள் மதிப்பதாகவும் பன்சால் கூறியுள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் தங்களது குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் பாரம்பரியத்தைப் பெருமையுடன் வெளிப்படுத்துகிறார்கள் என்று அவர் புகழாரம் சூட்டினார். இந்த விளக்கத்தின் மூலம் சமூக ஊடகங்களில் லென்ஸ்கார்ட் நிறுவனம் குறித்து நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை