பட்டய கிளப்பும் ரசிகர்கள்... இன்னும் 3 நாளில் .... லியோ ட்ரெய்லர் !!

 
லியோ

தமிழ் சினிமாவில்  இளைய தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்  நடிகர் விஜய். இவர்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ  படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம்  அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.   இந்நிலையில் இப்படத்திற்கான ஆடியோ லாஞ்ச் செப்டம்பர் 30ம் தேதி நடைபெற இருந்தநிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் கேன்சல் செய்யப்பட்டது.  இதனால், படத்திற்கு பி மற்றும் சி சென்டர்களில் பெரிய அளவில் வசூல் இருக்காது என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.


 


 

இதனையடுத்து  லியோ படத்தின்  2வது சிங்கிளான 'சிங்கம் இறங்குனா காட்டுக்கு விருந்து. இவன் வேட்டைக்கு செதறணும் பயந்து..பெரும் புள்ளிகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி, குடல் உருவுற சம்பவம் உறுதி.. இதுவரையில் நல்லவன் இருந்தால் படாஸ்.. மிஸ்டர் லியோ தாஸ் இஸ் படாஸ்’ என்னும் பாடல் வெளியாகி பெரும் வைரலானது.  இந்நிலையில் இன்று இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட உள்ளதாக  படக்குழு அறிவித்தது.

லியோ

அதன்படி சற்று முன்பு சரியாக மாலை 5 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வரும் அக்டோபர் 5அன்று ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த அறிவிப்பு வெளியான போஸ்டரில் நடிகர் விஜய் கழுதைப்புலியுடன்  கத்தியை எடுத்து போரிடுவதுபோன்று போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, லியோ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட் குறித்து  அதனை சமூகவலைதளத்தில் ஷேர் செய்துகொண்டாடி வருகின்றனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web