லியோ ஒரு நாள் புக்கிங்க்கிலேயே சாதனை... கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!!

 
லியோ

இளையதளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  அனிருத் இசையமைப்பில் Seven Screen Studio தயாரிப்பில்  உருவான  லியோ படத்தின் மூலம் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் விஜய் மற்றும் த்ரிஷா.  

லியோ


 திரைப்படம் ரிலீஸ் தேதியை நெருங்கி வரும் நிலையில் பாடல்கள், டிரைலர் என படம் குறித்து வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய்  ரசிகர்கள்  விதவிதமான போஸ்டர்களால் தளபதியை கொண்டாடி வருகின்றனர்.  படக்குழுவினர் சிலரும் லியோ படம் குறித்து பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள்.

லியோ


இந்நிலையில் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.  வெளிநாடுகளில் எல்லாம் எப்போதோ படத்தின் புக்கிங் தொடங்கப்பட்டுவிட்டது. நேற்று ஒரு நாளில் மட்டுமே Book My Showவில் இந்தியாவில் மட்டுமே 1.2 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web