என்னை ஏமாத்த முடியாது.. தெறிக்க விட்ட “லியோ” பட டிரெய்லர்!!

இளையதளபதியின் ‘லியோ’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளனர். இதனால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் 2 வது பாடலான ‘BADASS’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது.
இன்று லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவி யூடியூப் தளத்தில் வெளியானது. டிரெய்லர் வெளியான திரையரங்குகளிலும், சமூக வலைதளங்களிலும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...