ஓடும் பேருந்தில் தான் ஏறுவோம்.. கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்!!

 
பேருந்து

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் ஏறுவதற்காக கல்லூரி மாணவர்கள் காத்திருந்தனர். வழக்கம் போல் வந்து நின்ற பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ஏறவில்லை.

பேருந்து

கல்லூரி மாணவர்களில் சில பேர் ஓடும் பேருந்தில் தான் ஏறுவோம். நின்று கொண்டிருக்கும் பேருந்தில் ஏறமாட்டோம் எனக் கூறி தகராறு செய்தனர். இதனால் ஓட்டுனர் பேருந்தை அதே இடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்திவைத்து விட்டார்.  நின்று கொண்டிருக்கும் பேருந்தில்  ஏறினால் தான் நான் பஸ்சை எடுப்பேன் என்று டிரைவரும் அடம்பிடித்து  நிறுத்தினார். இதனால் அரை மணி நேரம் பஸ் எடுக்காமல் மற்ற பயணிகள் அவதிப்பட்டனர்.

பேருந்து

மேலும் கல்லூரி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி அரை மணி நேரத்திற்கு பின்பு அனைத்து மாணவர்களும் பேருந்தில்   ஏறிய பின்பு புறப்பட்டு சென்றது. தினமும் இப்படி  அடம்பிடிக்கும் கல்லூரி மாணவர்கள் மீது பெற்றோர்களும், கல்லூரி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தினர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை