வீடுகள் தோறும் திமுக கொடி பறக்கட்டும்... முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு !
தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுகவினருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டு கருணாநிதியால் கட்டி காக்கப்பட்ட திமுக கழகம் தமிழகத்தில் 75 ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் நலப் பணிகளை செய்து வருகிறது. தற்போது திமுகவின் பவள விழா வர இருக்கிறது.

இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து திமுக நிர்வாகிகளின் இல்லத்திலும் கட்சிக் கொடி பறக்கவிடப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள கொடிக்கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டு அயராது உழைத்த திமுகவின் மூத்த முன்னோடிகளின் கரங்களினால் திமுககொடிகள் ஏற்றி வைக்கப்பட வேண்டும்.

வீதிகளின் இருபுறத்திலும் இரு வண்ணக்கொடி பறந்திட வேண்டும். மேலும் கழக கொடி பறக்காத திமுகவினரின் வீடுகளே இல்லை எனக் கூறும் அளவுக்கு திமுகவின் பவள விழாவினை சிறப்பாக கொண்டாட வேண்டும். எனவே திமுகவினரின் இல்லங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் திமுக கொடியினை ஏற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
