தாய்மையை போற்றுவோம்... அன்னையர் தின வாழ்த்துக்கள்!

 
அன்னையர் தினம்
 

நாம் இந்த  பூமிக்கு வர காரணமான அன்னையை கொண்டாடவும், போற்றவும், அவளுக்கு நன்றி சொல்லவும் வருடத்தில் ஒரே ஒரு நாள் போதுமா? ஒவ்வொரு நாளும் அவள் பெருமையை உணர்ந்து அவளுக்கு பணிவிடை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்று அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் மே மாதம்11 ம் தேதியான இன்று அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது.

தாய் என்பவள் கருவில் இருக்கும் போது மட்டும் நம்மை சுமப்பவள் அல்ல. நாம் பிறந்த பிறகும் நம்முடைய முதல் வாகனமாக அவள் மீது அவளுடன் தான் நம்மை சுமந்து செல்கிறாள். தன்னந்தனியாக பூமித்தாயின் மேல் காலூன்றி நடக்கும் காலம் வரையில் தன்னுடனே சுமப்பவள். நம்முடைய முதல் வாகனம்  அவள் தான். வருடத்தின் இந்த ஒரு நாளில் ஆவது அன்னையர் தினத்தில் அம்மாவின் தியாகங்களுக்கு நன்றி செலுத்துவதற்கும், அவர்களுக்கு அன்பைப் பொழிவதற்கும் வாய்ப்பாக அமைகிறது. அன்னையின் முயற்சிகளுக்கான பாராட்டுகளையும், அவர்களின்  இன்னல்களை நினைவுகூர்ந்து நன்றி செலுத்துவதற்கும் இந்த ஒரு நாளிலாவது முயற்சிக்கலாம்.  அவளின் அன்றாட பணிகளை குடும்பத்தினர் அனைவரும் பகிர்ந்து செய்து அவளுக்கு ஓய்வு அளிக்கலாம்.அதுவே நாம் அவளுக்கு செலுத்தும் நன்றிக்கடன்.

அன்னையர் தினம் அம்மா அன்னை தாய்

உலகில் தம் பிள்ளைகளின் மீது நிபந்தனையற்ற எதிர்பார்ப்பில்லாத அன்பை அனுதினமும் பொழிபவள் தாய் மட்டுமே. அன்னையரின் அன்பை சரியாக அளவிட்டு கூற வார்த்தைகள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. அந்த அன்பு அத்தனை தூய்மையானது.குடும்பத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும் அவர்கள் ஆற்றும் ஈடு இணையில்லாத தன்னலமற்றத் தியாகத்தை கொண்டாடுவதே அன்னையா் தினம் ஆகும்.

அம்மா என்ற சொல்லை உச்சரிக்கும் போதே அனைவருடைய உள்ளங்களும் உணா்ச்சியால் தழுதழுப்பதை உணர முடியும். ” எந்த ஒரு குழந்தைக்கும் அதனுடைய தாயின் அன்பைவிட சிறந்த ஒன்று இந்த உலகில் கிடையாது. தாயின் அன்பு சட்டத்தை அறியாது. தாயின் அன்பு பாதையில் எத்தனை தடைகள் வந்தாலும் அவை எப்போதும் அன்பு வழியில் தொடா்ந்து செல்லும்”.

அமெரிக்காவை சோ்ந்த அன்னா ஜார்விஸ் தான் அன்னையா் தின கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தவர். அவர் தன்னுடைய அன்னை இறப்பதற்கு முன்பாக அன்னையா் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று விரும் அவர் உயிரோடு இருக்கும் போது அன்னையா் தினத்தைக் கொண்டாட முடியவில்லை.

அன்னையர் தினம் தாய் அன்னை

ஆனால் அதற்கு பிறகு அவரின் தொடர் முயற்சிகளின் விளைவாக, அவருடைய அன்னை இறந்து 3 ஆண்டுகள் கழித்து, அதாவது 1908 ஆம் ஆண்டு மேற்கு வொ்ஜீனியாவில் உள்ள தூய ஆண்ட்ரூ மெத்தடிஸ்ட் ஆலயத்தில் முதன் முதலாக அன்னையா் தினம் கொண்டாடப்பட்டது.அன்னையர் தினம் என்பது ஒரு நாள் கொண்டாட்டமாக மட்டும் இருக்கக் கூடாது. தாயின் வலி, பரபரப்பு இவற்றை எல்லாம் எப்பொழுதும் போக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.  உறவுகள் அழகாகட்டும்.தாய்மையை போற்றுவோம். அன்னையை கொண்டாடுவோம்.வாழ்வில் ஏற்றம் பெறுவோம். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web