ஆட்சியை பிடித்து மீண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வோம்... நிர்மலா சீதாராமன் சூளுரை... !
இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. பிரதமர் மோடி செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களால் இந்தியா மகத்தான வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த வளர்ச்சியின் வெளிப்பாடாக ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயிகள், ஏழைகள்,பெண்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் தடைச் சட்டம், கிராமப்புறங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஒதுக்கீடு, ரேஷனில் இலவச உணவுப்பொருட்கள், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்பு, 34 லட்சம் கோடி உதவித்தொகை நேரடியாக ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கு மூலம் செலுத்துதல் நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் சமமான வளர்ச்சி என தொடர்ந்து செயல்பட்டு வருகிறது எங்கள் அரசு. பாஜக 2047ல் புதிய இந்தியாவை படைக்க காத்திருக்கிறது.
சமூகநீதி, ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் ஒழிப்பு இவைகளை வெளிப்படைத் தன்மையுடன் செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.மேலும் அனைத்து தரப்பினரின் வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர் என்ற நம்பிக்கை உள்ளது. ஜூலை மாதமும் முழு பட்ஜெட்டை நாங்களே தாக்கல் செய்வோம் என சூளுரைத்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க