இன்று இரவு 7 மணிக்கு ”எல்ஜிஎம்” டீசர்!! தோனி வெளியீடு!!

 
எல்ஜிஎம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், அவருடைய மனைவியும் இணைந்து தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனம் ரோர் ஆப் தி லயன் என்ற சிஎஸ்கேவின் ஆவணப்படத்தை தயாரித்துள்ளது . அத்துடன் வுமன்ஸ் டே அவுட் என்ற குறும்படத்தை தயாரித்துள்ளது. தற்போது தமிழ்ப்படத்தை தயாரிக்க உள்ளது தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.  அதன்படி எல்ஜிஎம் படத்தை இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது.

எல்ஜிஎம்

இதற்கான டீசரை இன்று இரவு 7 மணிக்கு தோனி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்ஜிஎம் படத்தின் டீசரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி இன்று வெளியிடுகிறார். தோனி - சாக்‌ஷி தம்பதியின் DHONI ENTERTAINMENT நிறுவனத்தின் முதல் படமான எல்.ஜி.எம் படத்தை ரமேஷ் தமிழ் மணி இயக்குகிறார்.

எல்ஜிஎம்

இதில் ஹரீஸ் கல்யான், லவ் டுடே இவானா, நதியா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில், படத்தின் டீசரை தனது பேஸ்புக் பக்கத்தில் தோனியும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாக்‌ஷியும் இரவு 7 மணிக்கு வெளியிட உள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழத் தொடங்கியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web