அபூர்வ வீடியோ... ஜாலி மூடில் முத்தம் கொடுத்து கொஞ்சும் சிங்கங்கள்!!

வனவிலங்குகளின் வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வைரலாகின்றன. அந்த வகையில் சிங்கத்தின் ரொமான்ஸ் நிமிடங்கள் வீடியோவாகி வைரலாகிவருகின்றன. இந்த வீடியோவில் 2 சிங்கங்கள் சாலையில் படுத்துக் கொண்டு ரொமான்ஸ் செய்து முத்தம் கொடுக்கின்றன.இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்கள நிறுத்திவிட்டு படமெடுக்க தொடங்கிவிட்டனர்.
Lions causing a traffic jam. pic.twitter.com/9Dg6BStPRC
— Fascinating (@fasc1nate) September 5, 2023
மனிதர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் சிங்கங்கள், தங்கள் இணையுடன் கொஞ்சி விளையாடுவதை காணும் போதே சிலிர்க்கிறது. சிங்கங்கள் மிகவும் ஜாலியாக விளையாடுவதை காண்பது மிகமிக அபூர்வம் என்கின்றனர் நெட்டிசன்கள். ஆனால் அப்படியொரு அபூர்வ வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வனப்பகுதிக்குள் சுற்றுலா சென்றவர்கள் காட்டு வழியில் சஃபாரி வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சிங்கங்கள் வழியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தன. அவை ஒன்றுக்கொன்று முத்தம் கொடுத்து ஜாலி மூடில் இருந்தன. வாகனத்தை நிறுத்திய சுற்றுலாப் பயணிகள் சிங்கங்களுக்கு மிக அருகாமையில் இருந்து அவை கொஞ்சிக் கொள்வதை பார்த்து ரசித்து படமெடுத்தனர். அப்போது திடீரென மற்றொரு சிங்கம் ஓடிவந்து அவைகளுடன் இணைந்து விளையாடுகிறது.சிங்கங்கள் விளையாடும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!