மதுபானங்கள் விலை உயர வாய்ப்பு!! மதுபானப்பிரியர்கள் அதிர்ச்சி!!

 
டாஸ்மாக்

தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பால் முதல் பருப்பு எண்ணெய் வரை அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து விட்ட பிறகு மதுபானங்கள் விலை மட்டும் அப்படியே இருந்துவிடுமா என்ன? மதுபானங்கள் விலை உயர்வு குறித்து டாஸ்மாக் நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மதுபான வகைகளின் உற்பத்தி செலவு அதிகமாகியுள்ளதால் கொள்முதல் விலையை சற்று உயர்த்தி தாருங்கள் என்ற மதுபான நிறுவனங்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்படி  சாதாரண வகை மதுபானங்களின் விலை சற்று உயர்த்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.

டாஸ்மாக்


தமிழகம் முழுவதும் உள்ள 5600 கடைகளில் விற்பனை செய்வதற்காக 7 நிறுவனங்களிடம் இருந்து பீர் பாட்டில் வகைகளை டாஸ்மாக் நிர்வாகம் கொள்முதல் செய்கிறது.  அதேபோல 11 நிறுவனங்களிடம் இருந்து பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற   மது வகைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மது தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களின் விலையை லிட்டருக்கு ரூ3.47ஆக அரசு உயர்த்தியது. இதனால் மதுவகை தயாரிப்புக்கான உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளது. எனவே அரசு கொள்முதல் செய்யும் மது பாட்டிலுக்கு கூடுதல் விலை தர வேண்டும் என மது தயாரிப்பு ஆலைகள் கோரிக்கை விடுத்திருந்தன.

டாஸ்மாக்

இதன்படி  சாதாரண மதுவகை, பாட்டிலுக்கு ரூ2 வரை உயர்த்தித்தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மதுபான கடைகளில் விற்பனை விலை சற்று உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் குவாட்டர் பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.இந்தத் தகவலால் மதுபானப்பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web