மர்ம காய்ச்சலால் சிறுமி பலி... கதறித் துடித்த பெற்றோர்!
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கசாமி குளம் அருகே வசிக்கும் சக்திவேல்-சரண்யா தம்பதியரின் இரண்டாவது பெண் குழந்தை கார்த்திகா, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், ஆனால் காய்ச்சல் தீவிரம் அடைந்ததால், பெற்றோர் கார்த்திகாவை சென்னை பிரபல தனியார் மருத்துவமனையில் கொண்டு செல்லும் போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த மர்மக் காய்ச்சல் சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள், காய்ச்சலின் காரணத்தை உடனடியாக கண்டறிந்து, தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்தல் அவசியம் என வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரம் சுகாதாரத் துறை இணை இயக்குநர் செந்தில் தெரிவித்ததுபோல், குழந்தை வசித்த பகுதியில் தொற்று பரவலுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. தற்போதைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் குழந்தை இறப்புக்கான காரணத்தை விசாரணை செய்து தீர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
