பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி... பெரும் பரபரப்பு!

 
கடலூர்

கடலூர் மாவட்டத்தில்  புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு  வருகிறது. இங்கு சுமார் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து  வருகின்றனர். இவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் கீழ் இன்று வழக்கம்போல் உணவு வழங்கப்பட்டது. 

ஆம்புலன்ஸ்

இந்நிலையில்  உணவில் ஒரு பல்லி கிடந்ததாக மாணவர் ஒருவர் ஆசிரியர்களிடம் தெரியப்படுத்தினார்.  அந்த உணவை சுமார் 18 பேர் சாப்பிட்டனர். அந்த மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு எதுவும் ஏற்படாத நிலையில், பள்ளி நிர்வாகத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள புவனகிரி மருத்துவமனையில் இருந்து செவிலியர்களை வரவழைத்து மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். 

உத்தரபிரதேச போலீஸ்

அதே சமயம், இது குறித்து தகவல் அறிந்ததும் பள்ளிக்கு வந்த பெற்றோர், அங்கிருந்த ஆசிரியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த 18 மாணவர்களும்  அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களது உடல்நலம் சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?