கோவிந்தா... கோஷமிட்டபடி லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் பாதயாத்திரை!!

 
லோகேஷ் கனகராஜ்

இளைய தளபதியின் அடுத்த படம் லியோ. இந்த திரைப்படம் தொடங்கியது முதல் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ‘வாரிசு’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’.  செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இந்த படம்   அனிருத் யமைப்பில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில்   பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் என  பலர் நடித்துள்ளனர்.ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், லியோ படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

லியோ

லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால் அப்படத்தின் புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லியோ பட ரிலீஸ் நெருங்கி வருவதால்,   இயக்குநர்  லோகேஷ் தன்னுடைய டீம் உடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாத யாத்திரை சென்றுள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் திருப்பதி மலையேறும் போது கோவிந்தா கோஷமிட்டபடி செல்லும் வீடியோவை இயக்குனர் ரத்னகுமார் பதிவு செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web