நெகிழ்ச்சி... பசு மாட்டிடம் பால் குடித்து வளரும் ஆட்டுக்குட்டிகள்!

 
நெகிழ்ச்சி... பசு மாட்டிடம் பால் குடித்து வளரும் ஆட்டுக்குட்டிகள்!

நீலகிரி மாவட்டத்தில் பசு மாட்டிடம் பால் குடித்து வளரும் ஆட்டுக்குட்டிகளை அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் நெகிழ்ச்ச்சியுடன் வந்து பார்த்து செல்கின்றனர். ஆட்டுக்குட்டிகள் பால் குடிப்பதை பசு மாடு தடுக்கவில்லை.

ஆடு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடசோலை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயியான இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நாகராஜ் வளர்த்து வந்த ஆடு ஒன்று 2 குட்டிகளை ஈன்றது. அவை கடந்த சில நாட்கள் தாய் ஆட்டிடம் இருந்து பாலை குடித்து வளர்ந்து வந்தன.

உதகை நீலகிரி

இந்நிலையில் நாகராஜ் வீட்டில் வளர்க்கும் பசு மாட்டிடம் ஆட்டுக்குட்டுகள் பாலை குடிக்கத் தொடங்கின. அப்போது ஆட்டுக்குட்டிகள் பால் குடிப்பதை பசு மாடு தடுக்கவில்லை. எனவே அவை தொடர்ந்து பசு மாட்டின் பாலை குடித்து பசிபோக்கி வளர்ந்து வருகின்றன. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் கண்டு செல்கின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?