அச்சச்சோ... கொண்டை ஊசி வளைவில் அந்தரத்தில் தொங்கிய லாரி..!!

 
அந்தரத்தில் தொங்கிய லாரி

 ஈரோட்டில்  27 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது திம்பம் மலைப்பாதை. சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில்  இந்த மலைப்பாதை வழியாக தான் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. இந்த பாதையில் சரக்கு வழிபாதையாக இருப்பதால் கனரக வாகனங்கள் வரிசைகட்டி நிற்கும். வழக்கம் போல் நேற்று அதிகாலையும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

அந்தரத்தில் தொங்கிய லாரி


திம்பம் மலைப்பாதையில் 9வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து லாரி ஓட ஆரம்பித்தது. கண் இமைக்கும் நேரத்தில் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி மலைப்பள்ளத்தில் உருண்டுவிழும் நிலை ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்த பொருட்களின் பாரம் காரணமாக லாரி அப்படியே அந்தரத்தில் நின்று விட்டது.  லாரியின் நடுப்பகுதி தரையில் தட்டியதாலும், டிரைவரின் முயற்சியாலும் இது நடைபெற்று இருக்கலாம் என்கின்றன முதல் கட்ட தகவல்கள். 

அந்தரத்தில் தொங்கிய லாரி


லாரியின் முன் பகுதி மட்டும் அந்தரத்தில் தொங்கியபடி இருந்ததை பார்த்தாலே தலைசுற்றி மயக்கம் வந்து விடும் அளவுக்கு ஆபத்தான கட்டத்தில் இருந்தது.  மயிரிழையில் லாரி மலைப்பள்ளத்தில் கவிழ்ந்து விழுவது தவிர்க்கப்பட்டது. லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக கீழே இறங்கி உயிர் தப்பினார். பின்னர் சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு  லாரி மீட்கப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web