காதல் தோல்வி.. அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியர் தற்கொலை!

 
ஆகாஷ்

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் நல்லத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (25). இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களுக்கு மாவு கட்டு போடும் பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

வேலை நிமித்தமாக அபுதாபிக்கு சென்ற பெண் தற்போது அங்கு செட்டிலாகி உள்ளார். இதனால் ஆகாஷிடம் சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆகாஷ் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஆகாஷ் மீண்டும் காதலியிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆகாஷ் மனமுடைந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு மாவு அறைக்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். சக ஊழியர்கள் அறையை உடைத்து பார்த்தபோது, ​​அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்த ஆகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்ள ஆகாஷ் திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென தற்கொலை செய்து கொண்டார். மேலும், ஆகாஷிற்கு மருத்துவமனையில் தொடர்ந்து இரவு பணி வழங்கப்படுவதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!