காதலிச்சவளே பொண்டாட்டி... திருமணத்திற்கு பிறகு இளைஞர் செய்த தரமான சம்பவம்... குவியும் வாழ்த்துக்கள்!

 
 லின் ஷு

காதலிச்சவளே பொண்டாட்டியாக வருவது எல்லாம் ஆசிர்வதம் தான். அப்படி காதலிச்சவளே பொண்டாட்டியா வந்த பிறகும் அதே காதலுடன் கணவனை கவனித்துக் கொள்வதும், கணவன் மனைவியை கவனித்துக் கொள்வதும் வரமாகி விடுகிறது. அப்படி காதல் தேவதை இந்த ஜோடியை ஆசிர்வதித்திருக்கிறது. கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள வெய்பாங் நகரைச் சேர்ந்தவர் லின் ஷு. 7 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த மே மாதம் நடந்தது. காதலி மனைவியாகவும் மாறிய பிறகும் லின் மீதான காதல் குறையவில்லை. அவருக்காக அனைத்தையும் விட்டுக் கொடுக்கிறார். அதுபோல, திருமணத்திற்கு முன்பு வாடகை வீட்டிலிருந்து பணியிடத்திற்கு ஒரு மணி நேரம் பயணம் செய்த லின், இப்போது மனைவி வந்ததும் அவருடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறார்.

இதற்காக அவர் தனது மனைவியின் சொந்த ஊரான வெய்பாங்கில் தங்கி, அவருக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்து, தினமும் அவரது அன்பில் திளைக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், லினின் குடியிருப்புக்கும் அவர் பணிபுரியும் அலுவலகத்திற்கும் இடையே உள்ள தூரம் 160 கி.மீ. தூரம் உள்ளது. இதனால், தினமும் 320 கி.மீ., பயணம் செய்து, வேலைக்கு சென்று வருகிறார். செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதால் மனைவிக்காக தினமும் 320 கி.மீ. பயணம் செய்வது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த வீடியோ பதிவுகளையும் அந்நாட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதன்படி தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வெய்பாங்கில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலை 5.20 மணிக்கு புறப்பட்டு செல்கிறார்.

மின்சார பைக்கில் 30 நிமிடங்கள் பயணித்து ரயில் நிலையத்தை அடைகிறார். இதையடுத்து, காலை 6.15 மணிக்கு ரயிலில் ஏறி, 7.46 மணிக்கு கிங்டாவ் சென்றடைந்தார். ரயிலில் இருந்து இறங்கி அலுவலகத்தை அடைய 15 நிமிடங்கள் நடந்து செல்கிறார். அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள கேண்டீனில் காலை உணவை எடுத்துக் கொள்கிறார். அதன்பின், காலை 9 மணிக்கு தனது பணியைத் தொடங்குகிறார். வேலையை முடித்து விட்டு 3 முதல் 4 மணி நேரம் பயணம் செய்து வீட்டை அடைகிறார். அவரது நீண்ட தூர பயணம் பற்றி அறிந்ததும், அவர் பயணத்தில் அதிக நேரத்தை செலவிடுகிறார் என்று பல சமூக ஊடக பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால், புதிதாக திருமணமான லின்னோ, “எல்லாம் தன் மனைவியின் அன்புக்காகத் தான்” என்கிறார். "இந்த நீண்ட பயணம் சலிப்படையவில்லை. போக்குவரத்து வசதியும் உதவியாக உள்ளது" என்று அவர் கூறுகிறார். அவரது நிலையை அறிந்த லின் மேலாளர் அவர் கூடுதல் நேரம் வேலை செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் "இது ஒரு தற்காலிக பயணம்" என்று லின் கூறுகிறார். மனைவி கிங்டாவோவில் வேலை தேடுகிறார், அவருக்கு வேலை கிடைத்தவுடன் அவர்கள் நகரத்தில் வசிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த வீடியோவை 70 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், மேலும் ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web