காளையால் தான் காதல் திருமணம்... இளம் தம்பதியினர் நெகிழ்ச்சி... !

 
காயத்ரி

காளையை அடக்குனா தான் பொண்ணு தருவேன்னு சினிமாக்கள்ல பாத்திருக்கோம். நிஜத்திலேயே  ஒரு ஜோடி ஜல்லிக்கட்டு காளையால் தான் எங்கள் கல்யாணமே நடந்தது எனக் கூறுகின்றனர்.  திருச்சி மாவட்டம் , கல்லணையில் வசித்து வரும்  காதல் தம்பதி உத்தமர் சீலி சரத்குமார் மற்றும் காயத்ரி. இன்று நடைபெறும்   பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தன்னுடைய காலை ஒயிட் ரோஸ் காளையை அழைத்து வந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு
காளையை குறித்து இவர்களிடம் கேட்கப்பட்ட போது  காளையின் குணாதிசயங்கள் குறித்து அடுக்கடுக்காக மணிக்கணக்கில் பேசுகின்றனர். இதிலிருந்தே  இவர்கள்  காளை மீது வைத்துள்ள அன்பை புரிந்துகொள்ளமுடிகிறது. இந்நிலையில் காளையை குறித்து   காயத்ரி   ” தொடர்ந்து 7  ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுகளை கலந்து கொள்ள அழைத்து வருகிறோம்.  முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் எங்கள் காளைகளை களமிறக்க உள்ளோம். ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே காளைகளை வளர்த்து வருகிறோம்.

ஜல்லிக்கட்டு

 இந்த காளை வெள்ளை நிறத்தில் உள்ளது. அடிக்கடி ரோஸ் மாலை அணிவதால் இதற்கு ஒயிட் ரோஸ் என பெயர் வைத்திற்கிறோம் . காளையால் தான்  எங்களுக்கு காதல் திருமணம் நடந்தது. அதனால் அதன் மீது அதிக அன்பு வைத்திருக்கிறோம்.காளையின் மீது வைத்த அன்பின் காரணமாகவே இம்மூன்று காளைகளையும் வளர்த்து வருகிறோம்.” எனக் கூறியுள்ளார்.காளையின் மீது இத்தம்பதியினர் வைத்திருக்கும் அன்பும், அக்கறையும் தான்  காளையின் காரணமாகத்தான் திருமணம் சாத்தியமானது எனக் கூறுவதும் கேட்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.  

 தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web