ஆஸ்கர் நாமினேஷன்... `லவ் ஸ்டோரி’ பட புகழ் நடிகர் ரியான் ஓ நீல் காலமானார்!

 
ரியான் ஓ நீல்

சிறந்த நடிகர் விருதுக்காக, ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டவரும், 'லவ் ஸ்டோரி’ பட புகழ் ஹாலிவுட் நடிகருமான ரியான் ஓ நீல் நேற்று காலை காலமானார். நடிகர் ரியான் ஓ நீல் காலமான செய்தியை அவரது மகன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, உறுதிபடுத்தியுள்ளார்.

’லவ் ஸ்டோரி’ திரைப்படத்தில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களைத் திரும்பி பார்க்க செய்தவர் ரியான். ‘வாட்ஸப்’, ‘பேப்பர் மூன்’ போன்ற பல படங்களில் நடித்துள்ள ரியான், உலக திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். ‘லவ் ஸ்டோரி’ படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காக, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு ரியான் நாமினேட் செய்யப்பட்டார். நடிகர் ரியான் ஓ நீல், நேற்று தனது 82வது வயதில் காலமானார். நடிகர் ரியானின் மறைவு செய்தியைப் பகிர்ந்திருந்த அவரது மகன், நடிகர் ரியானின் இறப்பிற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. 

நடிகர் ரியான் மறைவு குறித்து அவரது மகன் பேட்டரிக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ரியான் எப்போதும் தன்மையான மனிதர். தேவை என்போருக்கு உதவி செய்தே பழக்கப்பட்டவர். ஆனால், இன்று அவர் நம்மோடு இல்லை.

ரியான் ஓ நீல்

அவருக்கு உடன் இருந்து உதவிய அணியினருக்கும், நண்பர்களுக்கும் நன்றி. அவரைப் பற்றி எதிர்மறையாக செய்தி பரப்புவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். யாரைப் பற்றியும் பேசுவதற்கு முன்பு கண்ணாடியில் முதலில் உங்களைப் பாருங்கள்.

எனது தந்தை 82 வயது வரை நிறைவாக வாழ்ந்து முடித்துள்ளார். அவரைப் போல சிறந்தவர் யாரும் இருக்க முடியாது. லவ் யூ! மிஸ் யூ!’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!