குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... 7 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்!
தூத்துக்குடியில் 7 நாட்களுக்கு பின் விசைப்படகு மீனவர்கள் 179 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகளில் சுழற்சி முறையில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மீன்பாடு அதிகமாக இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் செப்.26 மற்றும் 27 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

அதன் பின்னர் தசரா பண்டிகையை முன்னிட்டு அக்.2ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சுமார் ஒரு வாரத்திற்கு பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுழற்சி முறையில் 179 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
