வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை!!

 
அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி:  மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில்   இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே  அறிவிக்கப்பட்டு இருந்தது.  

மழை

அதே நேரத்தில்   வடமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில், இது மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

மழை

இதன் காரணமாக தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web