நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
வங்கக் கடலில் நாளை அக்டோபர் 1ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதே நேரத்தில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் இன்னொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் காரணமாக மத்திய வங்க கடல் பகுதியில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
