வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-ந்தேதி தொடங்கியதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரை பதிவாகி வந்தது. இதன் தாக்கமாக, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை கடந்த அக்டோபர் 26-ந் தேதி ‘மோந்தா’ என்ற பெயரில் புயலாக வலுப்பெற்று, முதலில் சென்னை அருகே கரையை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டது. ஆனால், அது ஆந்திர மாநிலம் காக்கிநாடா நோக்கி நகர்ந்து, அக்டோபர் 28-ந் தேதி மாலை 6 மணியளவில் அங்கு கரையை கடந்து சென்றது.
அந்த நேரத்தில், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் அப்பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளானது. எனினும், புயல் பாதை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பெரிய அளவில் மழை பதிவாகவில்லை.
இந்நிலையில், வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு மியான்மர் கடலோரம் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது மியான்மர் நோக்கி நகரும் என்பதால், தமிழகத்தில் இதனால் குறிப்பிடத்தக்க மழை பாதிப்பு ஏற்படாது என வானிலை மையம் விளக்கியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
