ஹைவேயில் சொகுசு கார்கள் மோதி விபத்து... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
கார்
 

மும்பை வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவேயில்  இரவு நடந்த ஒரு அதிர்ச்சிகரமான விபத்து, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போர்ஷே 718 பாக்ஸ்டர் மற்றும் பிஎன்டபிள்யூ ஆகிய இரண்டு சொகுசு கார்களும் மிகுந்த வேகத்தில் பயணித்ததையடுத்து, ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சிதைந்தது.

விபத்து இடத்தில் காரின் வலது பக்கம் முற்றிலும் நொறுங்கிய நிலையில் காணப்பட்டது. கார் சாரதி காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தின் போது காற்றுப்பைகள் (airbags) செயல்பட்டு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்காலிக விசாரணைகளின்படி, இரு கார்களும் போட்டி போடுவதுபோல் ஒரே வேகத்தில் சென்றதாக தெரிகிறது. தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் வேகக் கட்டுப்பாடு மீறப்பட்டதா, அல்லது சட்டவிரோத ரேஸ் நடத்தப்பட்டதா என்பதைக் கேள்விக்குட்படுத்தி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான முழு CCTV காட்சிகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில்  பரவி வருகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?