மதிமுக நகரச் செயலாளர் மகன் கல்லால் அடித்து கொலை!

 
மதிமுக
 

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மதிமுக நகரச் செயலாளர் மகன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டி மதிமுக நகரச் செயலாளராக பதவி வகித்து வருபவர் மோகன். திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பகுதியில் இனிப்பு கடை நடத்தி வரும் இவருக்கு சொந்தமாக மன்னார்குடி சாலையில் இடம் ஒன்று உள்ளது. 

ஆம்புலன்ஸ்

இந்த நிலத்தின் அருகே, சிங்களாந்தியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் லேத் பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆறுமுகம் இறந்து விட்ட நிலையில், லேத் பட்டரையை அவரது மகன் ஸ்ரீராம் (20) நிர்வகித்து வருகிறார். இவருக்கும் மதிமுக நகரச் செயலாளர் தீபம் மோகனின் மகன் அருள்பிரகாஷ் (48) என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் ஸ்ரீராம் அவரது பெரியப்பா மகன் முருகேசன் (28) மற்றும் சிலரும் சேர்ந்து அருள்பிரகாஷிடம் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அருள் பிரகாஷை இருவரும் செங்கல்லால் அடித்து தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அருள்பிரகாஷ் மயங்கி விழுந்தார்.

உத்தரபிரதேச போலீஸ்

அந்த பகுதியில் இருந்தவர்கள் அருள்பிரகாஷை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அருள்பிரகாஷ் இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனையும், ஸ்ரீராமையும் கைது செய்தனர். மதிமுக நகர செயலாளர் மகன் செங்கல்லால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web