உஷார்.. தீயாய் பரவும் “மெட்ராஸ் ஐ”... அமைச்சர் எச்சரிக்கை!!

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க இருப்பதால் மழைக்கால நோய்கள் வரத் தொடங்கி விட்டன. வழக்கமாக வரும் காய்ச்சல் , சளி, இருமல் போன்ற நோய்களுடன் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்வலி நோய் சென்னையில் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. அதனை தடுக்கும் நடவடிக்கைகள் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சென்னையில் பரவும் கண்வலி தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “ தமிழகத்தில் வெகுவிரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் ‘மெட்ராஸ்-ஐ’ எனப்படும் கண்வலி நோய் பரவ ஆரம்பித்துள்ளது . ஆகஸ்ட் மாதத்தில் எழும்பூர் மருத்துவமனையில் 240 பேருக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு வந்து விட்டால் போதும் .
அனைவருக்கும் பரவி விடுகிறது. கண்வலி ஏற்பட்டால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் சுய சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூடாது. “என கேட்டுக்கொண்டார். மேலும், வரும் செப்டம்பர் 16 முதல் 25ம் தேதி வரையில் 10 நாட்கள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!