9 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

 
எய்ம்ஸ்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் 5 ஆண்டுகளுக்கு முன்பே நாட்டப்பட்டது.  . எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாடு உட்பட  சில மாநிலங்களில் அமைக்கப்படும் என  2015 பிப்ரவரி    பட்ஜெட் தாக்கலில்  நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார்.  தமிழகத்தில்  மொத்தம்  5 இடங்கள் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில்   221 ஏக்கரில், ரூ.1,265 கோடி நிதியில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மதுரை எய்ம்ஸ்

 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுரை வந்த பிரதமர் மோடி, 2019, ஜனவரி 27ல் அடிக்கல் நாட்டினார்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை  அடுத்த 3 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்தார்.  அறிவிப்பு வெளியாகி   தற்போது 9 ஆண்டுகளாகி விட்ட நிலையில்    சுற்றுச்சுவர் பணி முடிந்த நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வாடகை கட்டிடத்தில்  எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும்!

கட்டுமானப்பணிக்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ள எல் அண்ட் டி நிறுவனம், வாஸ்து பூஜையுடன் பணிகளை தொடங்கியுள்ளது. கீழ் தளம், தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   . 33 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக எல் அண்ட் டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web