மதுரை ரயில் விபத்து .. கதற வைக்கும் வீடியோ, புகைப்படங்கள்!!

 
கதறி துடிக்கும் பெண்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா பயணமாக 60 பேர் சுற்றுலா ரயிலில் பயணம் செய்தனர். இந்நிலையில் மதுரையில் ரயில் பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் பலி ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில் விபத்து

மதுரை, ரயில் தீ விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தெற்கு ரயில்வே தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. 



பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரயில்  ஆகஸ்ட் 17ம் தேதி தமிழகத்திற்கு வந்தது. இந்த ரயில்   மதுரை போடி லைன் பகுதியில்   நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் ரயிலானது, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், ரயில் பெட்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

ரயில் விபத்து

ரயிலில் கடைசியாக இருந்த சிறப்பு முன்பதிவு ரயில் பெட்டியில் 90 பேர் இருந்தனர். தீ விபத்து குறித்து  அறிந்ததும் 60க்கும் மேற்பட்டோர் ரயிலை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தனர்.  தீப்பிடித்து எரிந்த ரயிலில் தகவல் 9 பேர் பலி  என தகவல் வெளியானது.  

தீவிபத்து

பலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.  தொடர்ச்சியாக எழுந்த புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.    அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் என முதல் கட்ட தகவல் வெளியானது.  

பேருந்து விபத்து

இந்நிலையில், பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.  ரயிலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே அதிகாரிகள், மருத்துவ குழுவினர், பாதுகாப்பு படையினர், வருவாய் துறையினர் சம்பவ பகுதிக்கு வருகை தந்துள்ளனர். காரணம் என்ன? ரயிலில் சுற்றுலா பயணிகள் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்தபோது, அது வெடித்து தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தீவிபத்து

இந்த ரயில் பெட்டியில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, மற்றொரு ரயில் அந்த பகுதியை கடந்து சென்றது. இதனால், ரயிலில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை ஏற்றி செல்ல அனுமதி இல்லை. இதனால்  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, தீயை அணைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்து   உள்ளது. தீப்பிடித்த்து எரிந்த அந்த ரயில் பெட்டி தனியாக கொண்டு செல்லப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதில், 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web