மகாளய அமாவாசை நாளில் செய்ய வேண்டியவை ... செய்யக் கூடாதவை... முழு தகவல்கள்!

 
மகாளய அமாவாசை
 

நாளை அக்டோபர் 2ம் தேதி மகாளய அமாவாசை . இந்த நாளில் நம் பித்ருக்களுக்கு  எவ்வாறு வழிபாடு செய்வது, எவ்வாறு படையல் போடுவது, எவ்வாறு தீபம் ஏற்றுவது? எவ்வாறு தர்ப்பணம் செய்வது? மகாளய அமாவாசையின் சிறப்பு என்ன?  என்பது குறித்த தகவல்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.  வருடத்தில் 12 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது.

அமாவாசை

ஆனால் சித்திரை மாதம், ஆடி மாதம், புரட்டாசி மாதம், தை மாதம் இந்த 4 மாதங்களில் வரக்கூடிய அமாவாசை தினத்தை மட்டுமே சிறப்பாக குறிப்பிடுவார்கள். அதிலும் இந்த புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய இந்த மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது .  நமது முன்னோர்களுக்கு வழிபாடுகளை செய்வதற்கு உரிய நாள்தான் இந்த மகாளய அமாவாசை.

மகாளய அமாவாசை நாளில் என்னென்ன செய்ய வேண்டும்?  
மகாளய அமாவாசை நாளில் காகத்துக்கு உணவு வைக்கிறதும் அல்லது மாட்டுக்கு அகத்திக் கீரை கொடுப்பதும் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. இது பொதுவாக எல்லாருமே செய்யக்கூடிய விஷயம்.
நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள கோவில் அல்லது கடல், ஆறு இருக்கும் இடங்களுக்கு சென்று நமது முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுப்பது கூடுதல் சிறப்பு.  மகாளய அமாவாசை தினத்தில் உணவு, உடை, பணம் என ஏதாவது நம்மால் முடிந்த விஷயங்களை தானமாக கொடுக்கலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு தானம் செய்யும் பொழுது பூரணமான பலன் நம்மை வந்து சேரும்.  மாலை நேரத்தில் முன்னோர்களுடைய படத்தை வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். அமாவாசை திதி அக்டோபர் 1 இரவு 10:35க்கு ஆரம்பித்து 3ம் தேதி நள்ளிரவில் 12:34 க்கு நிறைவடைகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் திருமூர்த்தி பகவானை வழிபாடு செய்தால் கூடுதல் பலன்களை கிடைக்கும்.

அகத்திக் கீரை
 
நமது முன்னோர்களை நினைவு கூறும் வகையில் இந்த மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.  இந்த தர்ப்பணம் கொடுக்கும்போது நம்முடைய முன்னோர்கள் அனைவரையும் மனதில் நினைத்துக் கொண்டு, அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.  நாளை அக்டோபர் 2 ம் தேதி காலையில 6:00 மணியிலிருந்து 12 மணிக்குள் தர்ப்பணம் செய்தால் நல்லது. ஏனென்றால் சூரியன் ஏறு பொழுதில் இருக்கும் போதே  தர்ப்பணம் கொடுப்பது நல்லது  
மகாளய அமாவாசை படையல்

மகாளய அமாவாசை நாளில்  காலை 11 மணி முதல் 12 மணி வரை படையல் போடலாம். 

மகாளய அமாவாசை தீபம்

மகாளய அமாவாசை நாளில்  மாலை 6:00 மணிக்கு மேல் தீபம் ஏற்றொ  வழிபாடு செய்யலாம்.  வீட்டில் தினமும் பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் விளக்குகளுடன் புதிதாக ஒரு அகல் விளக்கை ஏற்றலாம்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web