குலசேகரப்பட்டினத்தில் மகிஷாசூரன் சம்ஹாரம்... என்னென்ன கட்டுப்பாடுகள்? பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

 
குலசை
 

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த செப்டம்பர்  23ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று நள்ளிரவு மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது.

குலசை தசரா திருவிழா | நவநீதகிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா!
லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ள நிலையில் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரப்படுகின்றன. 
இன்று நள்ளிரவு மகிஷாசூரசம்ஹாரம் நடைபெற்றவுடன் தொடர்ந்து விரதமிருந்து வேடமணியும் பக்தர்கள் திருக்காப்பு களைகின்றனர். 

குலசை தசரா

திருவிழாவின் 9ம் நாளான நேற்று அன்ன வாகனம் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழா இன்று காலை 6மணி, காலை 7.30மணி, காலை 9மணி, காலை 10.30மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இன்று இரவு 11மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அன்னை சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு முன்பு எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?