பெங்களூருவில் கொடூரம்... லிப்டுக்குள் நாய்க்குட்டியை அடித்தே கொலை செய்த பணிப்பெண்... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
நாய்
 

பெங்களூரு பாகலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கொடூரச் சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. அங்கு செல்லப்பிராணிகளைப் பராமரிக்கும் பணியில் இருந்த புஷ்பலதா என்ற வீட்டுப் பணிப்பெண், “கூஃபி” என்ற நாய்க்குட்டியை மிகக் கொடூரமாகக் கொன்றுள்ளார்.

நாயை நடைப்பயிற்சிக்காக லிஃப்டில் அழைத்துச் சென்றபோது, அதன் கழுத்துப்பட்டியைப் பிடித்து தரையில் பலமுறை அடித்து கொன்றார் என்று சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. சம்பவத்திற்குப் பிறகு, நாய்க்குட்டி தவறி விழுந்துவிட்டதாக புஷ்பலதா பொய்யாக கூறினார்.

ஆனால், நாயின் உரிமையாளர் ராஷி பூஜாரி சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது உண்மையைக் கண்டறிந்தார். அதில், புஷ்பலதா நாயைக் கடுமையாக அடித்ததும், பின்னர் அதன் உடலை இழுத்துச் சென்றதும் தெளிவாகப் பதிவாகி இருந்தது.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, விலங்கு ஆர்வலர்கள்  மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து ராஷி பூஜாரி பாகலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் புஷ்பலதா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விலங்கு நல ஆர்வலர்கள் இந்தச் செயலை கடுமையாகக் கண்டித்து, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். நாயின் உரிமையாளர் ராஷி பூஜாரி, “முன்பு புஷ்பலதாவிடம் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தச் செயல் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!