பணிப்பெண் கொடுமை வழக்கு விவகாரம்.. திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் நேரில் ஆஜராக உத்தரவு!

பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் தனது மனைவி மார்லினாவுடன் சென்னை திருவான்மியூர் தெற்கு அவென்யூ பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் தன்னை துன்புறுத்தியதாக வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் அளித்த புகாரின் பேரில், திருவான்மியூர் போலீஸார் வன்கொடுமை தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும், தனிப்படை போலீசார், ஜனவரி, 25ல் கைது செய்தனர்.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் இருந்த இருவரும், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா ஆன்டோ மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கின் கோப்புகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகலை வழங்கி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா