மகர ஜோதி.. மண்டல பூஜை திருவிழா... சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
சபரிமலை

சபரிமலையில் நடைபெறும் புகழ்பெற்ற மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் பயண வசதிக்காக தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தின் சபரிமலையில் உள்ள ஸ்ரீ அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்வது வழக்கம். கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை நடைபெறும் இந்த புனித யாத்திரைக்காலத்தில், அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி மலையினை ஏறுகின்றனர்.

சபரிமலை

இதனை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (TNSTC) சார்பில் வரும் நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை இரண்டு மாதங்களுக்கு சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில் இருந்து பம்பை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த சிறப்பு சேவையில் அதிநவீன சொகுசு (Ultra Deluxe) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதியுள்ள (NSS) பேருந்துகள் இடம்பெறும். எனினும் சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிசம்பர் 27 முதல் 30 வரை கோவில் நடை சாத்தப்படுவதால், அந்த நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை கூட்டம்

மேலும் கூட்டமாக செல்லும் பக்தர்களுக்காக வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்யப்படும் எனவும், பயணிகள்  http://www.tnstc.in இணையதளம் மற்றும் TNSTC Official App வழியாக 60 நாட்களுக்கு முன்பே ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவைகள் குறித்து விரிவான தகவல்களை அறிய 94450 14452, 94450 14424, 94450 14463 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த ஆண்டில் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதால், கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?