மகர ஜோதி தரிசனம்... இன்று சபரிமலை பூஜை, தங்கும் இட முன்பதிவு தொடக்கம்!

 
சபரிமலை
 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரவிருக்கும் மண்டல பூஜை சீசனை முன்னிட்டு, பக்தர்கள் பயன்பெறும் வகையில் பூஜை மற்றும் தங்கும் அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு சேவை இன்று முதல் தொடங்குகின்றது.

சபரிமலை கூட்டம்

இந்த மாதம் 16ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. அடுத்த நாளான 17ம் தேதி முதல் மண்டல பூஜை சீசன் ஆரம்பமாகிறது. இதையடுத்து, பக்தர்களின் வருகை அதிகரிக்கும் நிலையில், பயண மற்றும் தங்கும் ஏற்பாடுகள் சீராக நடைபெற அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்ட தகவலின்படி, சன்னிதானத்தில் நடைபெறும் பூஜைகளுக்கான தரிசன முன்பதிவும், சன்னிதானத்தில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவும் இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கும். பக்தர்கள் [https://www.onlinetdb.com](https://www.onlinetdb.com) என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களுக்கு தேவையான தேதி, நேரம் மற்றும் வசதிகளை தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்யலாம்.

சபரிமலை கூட்டம்

சபரிமலை காலத்தில் பக்தர்கள் அதிகளவில் திரளும் நிலையில், ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. பயணத்திற்கும் தரிசனத்திற்கும் முன்கூட்டியே திட்டமிட வேண்டுமென தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!