மல்லிகார்ஜுன கார்கே திடீர் மருத்துவமனையில் அனுமதி... தொண்டர்கள் அதிர்ச்சி!

 
மல்லிகார்ஜுன கார்கே  

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே. இவர்  அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி  தலைவருமாவார். இவர்  திடீர் உடல்நலக் குறைபாடு காரணமாக  பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 83 வயதான கார்கே, தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் சுவாசக் குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.  

மல்லிகார்ஜுன கார்கே

செப்டம்பர் 30 ம் தேதி நேற்று  MS ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர கண்காணிப்பு பிரிவில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . காய்ச்சல் மற்றும் கால் வலி போன்ற அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள், “கார்கேவின் நிலைமை கட்டுக்குள் உள்ளது. எந்த கவலைக்குரிய விஷயமும் இல்லை, ஆனால் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பர்,” என்று தெரிவித்துள்ளனர்.  இதன் மூலம்  கார்கேவின் அக்டோபர் 7 அன்று நாகாலாந்து கோஹிமாவில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தை பாதிக்கலாம். கட்சி தலைவர்கள், அவரது உடல்நலம் முழுமையாக மீண்ட பிறகே அடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.  

தேர்தல் 2024 | காங்கிரஸ் வியூகம் என்னாவா இருக்கும்? மல்லிகார்ஜுன கார்கே களமிறங்குவாரா? 

காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், சமூக வலைதளங்களில் கார்கே விரைவில் மீண்டு வரவேண்டும் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் கார்கேவின் நிலை குறித்து தொடர்ந்து மாற்றம் தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.  மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல் நிலை குறித்து “கார்கேவின் நிலைமை நிலையாக உள்ளது. தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கண்காணிப்பில் இருப்பார்,” எனத்  தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?