மம்மூட்டி சகோதரி காலமானார்!! பிரபலங்கள் இரங்கல்!!

 
மம்மூட்டி

மலையாள திரையுலகின் முண்ணனி நட்சத்திர நடிகர் மம்மூட்டி. இவரது தாயார் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்த நிலையில் தற்போது மம்மூட்டியின் சகோதரி ஆமினா  காலமானார். இவருக்கு வயது  70. இவர்  வயது மூப்பு மற்றும் உடல்நல கோளாறு காரணமாக இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

மம்மூட்டி
இவரது கணவர் பி.எம்.சலீம் காஞ்சிரப்பள்ளி பாறைக்கால் பகுதியில் வசித்து வந்தவர் . ஆமினாவுக்கு மம்முட்டியுடன் சேர்த்து உடன் பிறந்தவர்கள் 5 பேர். இவரது உடல்  இன்று காலை 10 மணி அளவில் இவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மம்மூட்டியின் சகோதரி மறைவிற்கு உறவினர்கள் , பிரபலங்கள், திரைநட்சத்திரங்கள், நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

rip

அவருக்கு   ஜிபின் சலீம்,   ஜூலி மற்றும் ஜூபி, அவரது மருமகள் ஜின்சா மற்றும் அவரது மருமகன்கள் பாபு,   முனீர் ஆகியோர் உள்ளனர். இவருக்கு மம்மூட்டி  இப்ராஹிம்குட்டி, ஜக்காரியா, சவுதா, ஷபீனா என 5 பேர்   உடன்பிறந்தவர்கள். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web