இந்திய ராணுவ தகவல்களை பாகிஸ்தானுக்கு உளவு கூறியவர் கைது!

 
rajasthan

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலாக இந்தியா, மே மாதம் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தானை நோக்கி தாக்குதல் நடத்தியது. இது இரு நாடுகளுக்கிடையே சீரிய மோதலுக்குக் காரணமாகி, நான்கு நாட்கள் நீடித்த வலுப்பெரும் துப்பாக்கிச் சண்டையுடன், இருநாட்டு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னணியில் முடிவுக்கு வந்தது.

இந்த மோதலின் சூழலில், பாகிஸ்தானுக்காக உளவுத்தகவல் வழங்கியதாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அரியானா, பஞ்சாப், மற்றும் காஷ்மீர்—யூடியூபர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த மன்கத் சிங் என்பவரும் அதேக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில், மன்கத் சிங் கடந்த ஆண்டிலேயே பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஆன்லைனில் தொடர்பு கொண்டதாகவும், அந்த பெண் பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறை ஐ.எஸ்.ஐ-யைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. அந்த பெண்ணுடன் ஏற்பட்ட நெருக்கமான உறவுக்குப் பின்னர், மன்கத் சிங் ராஜஸ்தானில் உள்ள ராணுவ மற்றும் விமானப்படை தளங்களைப் பற்றிய முக்கிய தகவல்களை வழங்கியுள்ளார். தற்போது அவர் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?