கோவில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதனாவருக்கு கை, காலில் மாவுக்கட்டு!

 
மாவுக்கட்டு காவலாளி

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கிராமத்தில் அமைந்துள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் இரவு நேரத்தில் பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. இந்த கோவில் காவலாளிகளாக பணியாற்றி வந்த சங்கரபாண்டியன் (65) மற்றும் பேச்சிமுத்து (50) ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டனர். 

இது குறித்து போலீசார் கூறுகையில், “இரு காவலாளர்களும் சம்பவத்தன்று இரவில் கோவில் உள்பிரகாரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டிருந்தனர். கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது; பணம் மற்றும் சில வைரம் திருடப்பட்டதாகவும் விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் தெரிய வந்தது. 

மதுரை என்கவுண்டர் போலீசார்

மூன்று பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 25 வயதுடைய நாகராஜ் என்கிற சந்தேக நபர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். அதே நேரத்தில் முனுசாமி என்கிற மற்றொரு சம்பந்தப்பட்ட நபர் கைது தேடலில் இருக்கிறார் என்று அதிகாரிகள் கூறினர். 

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

காவலாளர் ஒருவர், முனுசாமியை பிடிப்பதற்காக முயற்சிக்கையில், முனுசாமி தப்ப முயன்றார். அப்போது ஏற்பட்ட மோதலில் முனுசாமிக்கு கையிலும், காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. முனுசாமியிடம் இருந்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன.

கோவிலில் பாதுகாப்பதற்காக பணியாற்றிய காவலாளிகள், திருடர்களை தடுப்பதற்கான கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்களை தாக்கி கொலை செய்தது ராஜபாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?