”நான் சாக போறேன்” இதற்கு காரணம் கம்பெனி ஓனர் தான்.. ஆடியோ வெளியிட்டு இளைஞர் தற்கொலை..!

 
ராகுல்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள நரசிங்கபுரம் கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் ராகுல் (27). பட்டதாரியான இவர், விநாயகபுரம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி இரவு தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப் ஆடியோவை அனுப்பிவிட்டு ராகுல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Suicide: Employee Commits Suicide on Office Premises in Attur Salem |  Coimbatore News - Times of India
ஆடியோவை கேட்டு நண்பர்கள் பீதியடைந்து பார்சல் கம்பெனி அலுவலகத்திற்கு ஓடினர்.அங்கு ராகுல் தூக்கில் தொங்கிய நிலையில் படுத்துள்ளார். இதையடுத்து, நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு ராகுலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவம் குறித்து ஆத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராகுலின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராகுலின் நண்பர்களிடம் இருந்து ஆடியோவையும் பெற்று ஆய்வு செய்தனர். அந்த ஆடியோவில், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவா, நாமக்கல் மற்றும்  சேர்ந்த சதீஷ் மற்றும் பெர்சியா என்பவர் தனது இறப்புக்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார். வேலையில் ஏற்பட்ட கூடுதல் அழுத்தம் காரணமாக மன உளைச்சலை ஏற்படுத்தியதால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது பெற்றோரை கவனித்துக் கொள்ளுமாறு நண்பர்களிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, ஆத்தூர் போலீஸார் மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினர். மேலும், ராகுல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அலுவலகத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் தூக்கில் தொங்குவது போன்ற சிசிடிவி காட்சிகளும் பதிவாகியுள்ளன.

ஆத்தூர்: அரசு பள்ளி மாணவன் சேலம் காவல் நிலையத்தில் தஞ்சம் - இவரைப் பற்றி  தகவல் அறிந்தால் ஆத்தூர் காவல் நிலையத்தில் தெரிவிக்கவும்|Inshorts

இவற்றின் அடிப்படையில் ஆத்தூர் போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் ராகுல் பேசிய ஆடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web