போலீசாரால் சுடப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு... பெரும் பரபரப்பு!

 
பேச்சித்துரை

திருநெல்வேலியில்  அம்பாசமுத்திரம்  வெள்ளான்குளியில் சாலை பாலம் அமைக்கும் பணியில்  ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மார்ச் 7ம் தேதி பைக்கில் மர்ம நபரள் இருவர்  மோட்டார் சைக்கிளில்  வந்தனர். இருவருமே நல்ல குடிபோதையில் இருந்ததால் நடுசாலையில்  மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து தகராறு செய்து கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த அரசு பேருந்தையும் விட்டுவைக்கவில்லை.  அதே சமயத்தில்  சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளியான விருதுநகர் மாவட்டம்  உடையநாதபுரம் பகுதியில் வசித்து வரும்  செல்லப்பாண்டி மகன் 21 வயது  கருப்பசாமி  மர்மநபர்களை கண்டித்து, பேருந்துக்கு  வழிவிடுமாறு கூறினார்.

பேச்சித்துரை

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரத்தில்  மர்மநபர்கள் அரிவாளால் கருப்பசாமியை சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க முயன்ற மூலச்சியைச் சேர்ந்த வெங்கடேசையும்   அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.  உடனடியாக  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார்   மர்மநபர்களை பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.  போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில் பேச்சித்துரையின்   வலது காலில் குண்டு பாய்ந்தது.  கல்லிடைக்குறிச்சி  ராமகிருஷ்ணன் மகன் சந்துருவை கைது செய்தனர்.  

போலீஸ்


அரிவாள் வெட்டில் காயமடைந்த போலீஸ் ஏட்டு செந்தில்குமார்   சிகிச்சை பெற்று வரும் நிலையில்  துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த பேச்சிதுரையும்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து திருநெல்வேலியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் வீரவநல்லூர் பகுதிகளில்   போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!