வீட்டிற்கு முன் வெளியேறிய கழிவுநீர்.. ஆத்திரத்தில் பக்கத்து வீட்டு பெண்ணை உலக்கையால் அடித்து கொன்ற நபர் கைது..!

 
தமிழரசி

திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை அருகே உள்ள சடையம்பட்டியை சேர்ந்த முத்துமாணிக்கம் மனைவி தமிழரசி (வயது 45). இவர் கூலித்தொழிலாளி. இவர்களின் பக்கத்து வீட்டில் அதே ஊரைச் சேர்ந்த அழகர் மகனும் கருப்பையா (35) உள்ளார். இருவரும் பக்கத்து வீட்டில் வசிக்கின்றனர். தமிழரசி வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கருப்பையா வீடு நோக்கி அடிக்கடி சென்றதாக கூறப்படுகிறது.

ஆத்தூர்: சொத்து தகராறு - மட்டப்பாறை பகுதியில் அண்ணனை தாக்கிய இரண்டு தம்பி  மற்றும் தாய் மீது வழக்கு|Inshorts

இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், காலை முதல் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாய் தகராறு முடிவில் கருப்பையா வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து தமிழ் ராணியின் தலையிலும், பல்வேறு இடங்களிலும் தாக்கினார். பலத்த காயமடைந்த தமிழரசி உடனடியாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நிலக்கோட்டை: விளாம்பட்டி காவல் நிலையத்தில் டிஐஜி முத்துசாமி ஆய்வு|Inshorts

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை குறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தப்பி ஓடிய கொலையாளியை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில், மதுரையில் பதுங்கியிருந்த கருப்பையாவை காவல் துறையினர் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web