நடிகை மஞ்சு வாரியருக்கு ரூ.5.5 கோடி இழப்பீடு கேட்டு வக்கீல் நோட்டீஸ்... திரையுலகில் பரபரப்பு!
கேரள மாநிலம் திருச்சூரில், படப்பிடிப்பின் போது போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கூறி நடிகை மஞ்சு வாரியருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் போதிய பாதுகாப்பு வழங்காததால் படத்தின் தயாரிப்பாளரான மஞ்சு வாரியருக்கு நடிகை ஷீத்தல் தம்பி , ரூ.5.5 கோடி இழப்பீடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மஞ்சு வாரியர் தயாரித்து வரும் படத்தில் மருத்துவ அதிகாரியாக ஷீத்தல் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சிம்மினி வனப்பகுதியில் நடந்தது. படத்தில் ஆபத்தான காட்சி ஒன்று இருந்தது. காட்சியை படமாக்க போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. நிறைய ரீடேக்குகள் இருந்தன. அந்த காட்சியை படமாக்கும் போது நடிகை ஷீத்தலுக்கு காயம் ஏற்பட்டதாக அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதிகளையும் செய்யவில்லை என்றும், காயம் காரணமாக நடிகை ஷீத்தலுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனை செலவுகள் அதிகமாக இருந்தது. தயாரிப்பு நிறுவனம் முதற்கட்டமாக ரூ.1,80,000 மட்டுமே கொடுத்தது. என்னால் இப்போது நடிகை ஷீத்தலால் வேலை செய்ய முடியவில்லை. எனவே, இழப்பீடு தொகையாக ரூபாய் 5 கோடியே 75 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என அந்த வக்கீல் நோட்டீஸில் கோரப்பட்டுள்ளது.

இது குறித்து பேசியிருக்கும் நடிகை ஷீத்தலின் வழக்கறிஞர் ரஞ்சித் மாரார், தயாரிப்பாளர்களை நேரடியாக இது குறித்து அணுகியும் அவர்களிடமிருந்து எந்தவொரு சாதகமான பதிலும் இதுவரை வராததால் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். மஞ்சு வாரியரைத் தவிர, அவரது தயாரிப்பு நிறுவனமான மூவி பக்கெட்டின் பங்குதாரர் பினீஷ் சந்திரனுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
