ஹரிஹரன் கான்சர்ட்டில் பலர் படுகாயம்...

 
ஹரிஹரன்

 

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தினார். கட்டுக்கடங்காத கூட்டத்தால் டிக்கெட் வாங்கியவர்கள் அரங்கத்திற்குள் நுழையவே  முடியவில்லை. பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் டிக்கெட்டுடன் வந்து தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளவும் அறிவிப்புக்கள் வெளியான பிறகு சலசலப்புக்கள் அடங்கத் தொடங்கின.   தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களாக இருக்கும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத், யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், இளையராஜா, வித்தியாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் தமிழகம், வெளி மாநிலங்கள் , வெளி நாடுகளிலும்  இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.


 சில நேரங்களில் இந்த மாதிரியான நிகழ்வுகளில்  சில குளறுபடிகளும் நடப்பதுண்டு.  சில பெண்களுக்கு பாலியல் சீண்டலும் நடைபெற்று சர்ச்சைகள் ஏற்படுவதுண்டு.  ஏ.ஆர் ரஹ்மான்   இசை நிகழ்ச்சி கடும் சர்ச்சையான நிலையில், இதற்கு மன்னிப்பு கேட்ட ஏ.ஆர்.ரகுமான், இதில் டிக்கெட் வாங்கி கலந்துகொள்ள முடியாமல் போனவர்களுக்கு டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி கொடுக்கப்பட்டது. இதே போன்ற ஒரு சம்பவம் தற்போது மீண்டும்  இலங்கையில் நடந்துள்ளது.

ஹரிஹரன்

பிரபல பின்னணி பாடகரான ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில்  நடிகைகள் ரம்பா, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, நடிகர்கள் மிர்ச்சி சிவா, யோகிபாபு, சாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.  இந்நிகழ்ச்சியை தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கினார். இந்த இசை நிகழ்ச்சியை காண அதிக அளவிலான கூட்டம் கூடிவிட்டது. இதனால் கட்டுக்கடங்காத கூட்டநெரிசலில்   சிக்கி ஏராளமானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகப்படியான டிக்கெட்டுகள் விற்பனை செய்திருப்பதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.   இந்த குளறுபடிகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என  இலங்கை அரசு தெரிவித்துள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web