வைரல் வீடியோ... மார்க் ஆண்டனி பட ட்ரெய்லர் வெளியீடு!!

 
சில்க் ஸ்மிதா

லத்தி படத்திற்கு பிறகு   நடிகர் விஷாலின் அடுத்த படம்   ‘மார்க் ஆண்டனி’. இந்தப் படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன்   படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இது விஷாலின் 33வது படமாகும். இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர் வினோத்குமார் திட்டமிட்டுள்ளார். 

 
இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார்.இப்படத்தின்  3  பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.  இந்த டிரெய்லரை நடிகர் கார்த்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

சில்க் ஸ்மிதா


கேங்ஸ்டர் கைகளில் டைம் மிஷின்  கிடைத்தால் என்ன ஆகும் என்பதை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள இந்த டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. இந்நிலையில் டிரெய்லரில் வரும் காட்சியில் மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதா இடம்பெற்றுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை