மார்ச் 12 பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அதிரடி அறிவிப்பு!

 
விடுமுறை

தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரசு மற்றும் பொதுவிடுமுறை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள் , திருவிழாக்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதுண்டு. அந்த வகையில் மார்ச் 12ம் தேதி  செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட  ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார்.  அதில் “ கேரள மாநிலம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கொடை விழாவிற்காக   கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  மார்ச் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்


பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் ஒவ்வொரு ஆண்டும் மாசித் திருவிழா விமரிசையாக நடத்தப்படுவதுண்டு.  அந்த வகையில் நடப்பாண்டில் மார்ச் 3ம்தேதி   மாசித் திருவிழா   கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கேரளா மற்றும் சுற்றுவட்டார  பகுதிகளில் உள்ள  பெண்கள் இருமுடி கட்டிக்கொண்டு இக்கோயிலுக்கு வந்து இங்குள்ள பகவதியம்மனை வழிபடுவர். இதனால்  இக்கோயில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது.  

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்


இத்திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மார்ச் 12ல் விடுமுறை அறிவித்துள்ளார்.   மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடைவிழாவை முன்னிட்டு மார்ச் 12ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மார்ச் 12ம் தேதி விடப்படும் உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஏப்ரல் 6ம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web